குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக போட் டோவை வெளியிட்ட நயன்தாரா!!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் தங்கள் இரட்டை மகன்களை பெற்றனர். நயன்தாரா அடிக்கடி தனது சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள் மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் நேற்று இரவு அதுபோல் இன்ஸ்டாகிராமில் தனது மகனை இடுப்பில் அமரவைத்து கொண்டு மொட்டைமாடி தோட்டத்தில் புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார். தாய்-மகன் இருவரும் தங்கள் மொட்டை மாடியில் செடிகளை கைகளால் தொட்டுக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.

அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிவப்பு இதய ‘எமோஜி’ அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் பலவித கருத்துகளை பதிவு செய்தனர். சமீபத்தில், இணையதளத்தில் கணவரை ‘அன்பாலோ’ செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.இதனிடையே, தனது இன்ஸ்டாகிராமில் U mm..I’ m Lost ! என்ற ஒரு ரகசிய குறியீட்டையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா- விக்னேஷ் ஜோடி குறித்து விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக இந்த போட்டோவை நயன்தாரா இணையத்தில் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *