பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த நாகை வாலிபர்!!

நாகை,
நாகைமாவட்டம் வேதாரண்யம் அடுத்து பஞ்சநதிக்குளத்தை சேர்ந்த அகிலரசன் என்பவர் பொறியியல் படிப்பை முடித்து சிஙப்பூரில் வேலைப் பார்க்கிறார்.

இவரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கிருஸ்துவ பெண்ணான கேத்தியா ஜேட் என்பவரும் முகநூலில் அறிமுகமாகி நண்பர்களாக பேசி வந்துள்ளனர். பிறகு இவர்களது நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி, இருவரும் காதல் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு இருவரின் வீட்டில் இருந்தும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரும் தங்களது குடும்பத்துடன் நாகை மாவட்டத்தில் உள்ள பஞ்சநதிக்குளத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேத்தியா ஜேட் இந்திய கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *