சென்னை:
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடியதற்காக இந்திய அணியை சச்சின் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள். நன்றாக முயற்சித்தார்கள். இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்தது. அவர்கள் விரும்பிய முடிவை ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்தியாவின் தோல்வியால் முன்னாள் கேப்டன் கங்குலி ஏமாற்றம் அடைந்து உள்ளார். அவர் கூறும் போது, “என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆனால் இந்திய அணி வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக் கிறது.
வெல்ல வேண்டிய வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்” என்றார்.