சென்னை:
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில், “பண்ட்டின் ரன் அவுட், ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார். வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.
இலக்கு பெரிய ஸ்கோர் இல்லையென்பதால், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்திற்குள் வந்துவிடுவோம் என நினைத்தோம். 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.