சென்னை:
“தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின், “புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?’ என்னும் கட்டுரையை குறிப்பிட்டு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம்.
ஏற்க மாட்டோம் என பள்ளிக்கல்வித் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.