தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலைஅணிவித்து மரியாதை…

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை.. செலுத்தினார். தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பெரியாரின் திருவுருவச் சிலைக்கும், அவரது திருவுருவப்படத்திற்கும் மாலையணிவித்தும், மலர்த்தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், பெரியார் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தியிருக்கிறார்.

சென்னை பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் உள்ள பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அவருடன் தமிழக வெற்றிக்கழக கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரும் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை என்பதை செலுத்தி இருக்கிறார். இதற்கு முன்பாக தமிழகம் வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மட்டுமே தலைவர்களின் நினைவு நாள மற்றும் பிறந்த நாட்களில் , அவர்களது திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்துவதை மேற்கொண்டு வந்தனர். முதன்முறையாக நடிகர் விஜய் நேரடியாக காலத்திற்கு வந்து ஒரு தலைவருக்கு மரியாதை செலுத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக , பெரியார் பிறந்தநாளையொட்டி இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த விஜய், ““சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களை பகுத்தறிவு மனப்பாண்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன்மூலம் விஜய்யின் அரசியல் பாதை திராவிட சாயலில் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *