2வது நாளாக சரிந்த தங்கம் விலை..!

சென்னை;
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

அதிலும் ஜூலை மாதம் தொடங்கிய முற்பாதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை (ஜூலை 22) தங்கம் விலை ஒரே அடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து , சவரன் மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி அன்றைய தினம் ஒரு சவரன் ரூ74,280க்கும், கிராம் ரூ.9,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஜூலை 23 புதன் கிழமையன்று தங்கம் விலை மீண்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரன் ரூ.75,040க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் ரூ.129 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.

ஆனால் நேற்று அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்தது. நேற்றைய தினம் (ஜூலை 24) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.74,040க்கும், ஒரு கிராம் ரூ. 9,255க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 360 குறைந்து, ஒரு சவரன் மீண்டும் ரூ.74 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது., அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.73,680க்கும், ஒரு கிராம் ரூ.9,210க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *