சென்னை:
கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது.
இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
அதன்படி ஜூலை 26-ந்தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.