உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற அனாஹத்!!

கெய்ரோ:
எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் நம்பர்-2 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.

இதில் அனாஹத் 6-11, 12-14, 10-12 என்ற செட் கணக்கில் 0-3 என தோல்வி அடைந்தார். இதனால் அனாஹத் சிங்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.


உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *