புதுடெல்லி:
மகளிர் பிரீமியர் லீக் டி 20 தொடருக்கான வீராங்கனைகள் மெகா ஏலம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த ஏலத்துக்கான பட்டியலில் 194 இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்னைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சு வீராங்கனையான தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவக்கூடும்.
வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங், அலிசா ஹீலி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன், நியூஸிலாந்தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்கவும் அணிகள் இடையே போட்டி நிலவக்கூடும்.