சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி அறிக்கை வழியாக சண்டை போட்டுக்கொண்டனர். பின்னர் ஐகோர்ட் உத்தரவின்பேரில் இருவரும் அமைதியாகி, தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனிக்க வைத்துள்ளது. அதில், “மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல்.
சண்டைகள் இல்லை, வார்த்தைகள் இல்லை, வாலை ஆட்டி அன்பு காட்டும் செல்லப்பிராணிகள் மட்டும் எனக்கு போதும். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது. பதில்களை தேட விருப்பமில்லாத எனக்கு அமைதியே ஆறுதல்.
இது என் கல்லூரிக் காலத்தில் நான் கற்றுக்கொண்டது. வாழ்க்கை வெள்ளை காகிதம் போன்றது. ஆனால் அதில் கருப்பு நிறத்தால் மட்டுமே எழுத முடிவது வேதனை. பல சோதனைகளை கடந்தாலே பிரகாசிக்க முடிகிறது” என்று ஆர்த்தி ரவி குறிப்பிட்டுள்ளார்.