டெல்லியில் கடமை பாதை அருகே புதிதாக கட்டப்பட்ட மத்திய தலைமை செயலக கட்டிடம் ‘கர்தவ்யா பவன்-3’-யை திறந்து வைத்த பிரதமர் மோடி!!

புதுடெல்லி:
டெல்லியில் கடமை பாதை அருகே புதிதாக கட்டப்பட்ட மத்திய தலைமை செயலக கட்டிடம் ‘கர்தவ்யா பவன்-3’-யை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள பழமையான அரசு கட்டிடங்கள் எல்லாம். ‘சென்ட்ரல் விஸ்டா’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தான் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது.

டெல்லி ராய்சினா ஹில்ஸ் பகுதியில் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் இதர துறை அலுவலகங்கள், சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன் மற்றும் நிர்மன் பவன் போன்ற பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களை ஒரே இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்காக டெல்லி கடமை பாதை அரு​கே, மத்​திய தலைமை செயல​கத்தை ‘கர்​தவ்யா பவன்’ என்ற பெயரில் 10 அடுக்​கு​மாடி கட்​டிடங்​களை மத்​திய வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற விவ​காரத்​துறை அமைச்​சகம் கட்டி வரு​கிறது.

இந்த கட்​டிடங்​கள் தற்​போதைய தேவைக்கு ஏற்ற வகை​யில் நவீன வடி​வில் கட்​டப்​படு​கின்​றன. இதில் முடிவடைந்த நிலை​யில் உள்ள கர்​தவ்யா பவன்-3 கட்​டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்​தார்.

இந்த புதிய கட்​டிடத்​துக்கு மத்​திய உள்​துறை, வெளி​யுறவுத்​துறை, ஊரக மேம்​பாட்​டுத் துறை, குறு,சிறு மற்​றும் நடுத்தர தொழில் துறை, மத்​தி​யப் பணி​யாளர், பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு ஆகிய அமைச்​சகங்​கள் மற்​றும் முதன்மை அறி​வியல் ஆலோ​சகரின் அலு​வல​கம் ஆகியவை மாறவுள்​ளன.

வெளிப்​படை​யான நிர்​வாகம்: இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் கட்​டமைப்​பு​களை புதுப்​பிக்​கும் தொலைநோக்​குடன் மத்​திய அரசு செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது. கடந்த 11 ஆண்​டு​களில், வெளிப்​படை​யான நிர்​வாகத்​தை​யும், மக்​கள் நலன் சார்ந்த பணி​களை​யும் நாட்டு மக்​கள் பார்த்​துள்​ளனர்.

சென்ட்​ரல் விஸ்டா திட்​டம் மற்​றும் இதர கட்​டமைப்பு வசதி​கள் எல்​லாம் நாட்​டின் உலகளா​விய தொலைநோக்கை வெளிப்​படுத்​துகிறது. மத்​திய அரசு அலு​வல​கங்​கள் எல்​லாம் ஆங்​கிலேயர் காலத்து பழமை​யான கட்​டிடங்​களில், போதிய வசதி​யின்றி பல ஆண்​டு​களாக இயங்கி வந்​தன. அங்கு பணி​யாற்​று​பவர்​களின் நலனுக்​காக கர்​தவ்யா பவன்​கள் கட்​டப்​படு​கின்​றன.

மேக் இன் இந்​தியா மற்​றும் தற்​சார்பு இந்​தி​யா​வின் வெற்றி கதையை எழுத நாம் இணைந்து பணி​யாற்ற வேண்​டும். நாட்​டின் உற்​பத்​தியை அதி​கரிப்​பதே நமது தீர்​மான​மாக இருக்க வேண்​டும். நாட்​டின் கனவு​களை நிறைவேற்​றும் தீர்​மானத்தை கர்​தவ்யா பவன் வெளிப்​படுத்​துகிறது.

இது வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்கு வழி​காட்​டும். இந்​தி​யா​வுடன் சுதந்​திரம் பெற்ற நாடு​கள் எல்​லாம் வளர்ச்​சி​யடைந்​த​போது, இந்​தியா மட்​டும் முன்​னேறாமல் இருந்​தது ஏன் என்​பது பற்றி ஆழமாக சிந்​திக்க வேண்​டிய நேரம் இது.

தற்​போதைய பிரச்​சினை​களை நாம் எதிர்​கால தலை​முறை​யினருக்கு விட்டு செல்​லக் கூடாது என்​பது​தான் நமது பொறுப்​பாக இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *