அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமர்சியாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பண்டிகை கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து குருநாதசாமி, பெருமாள்சாமி, காமாட்சியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனகோவிலுக்கு பக்தர்களால் தோலில் சுமந்து மகமேறு தேரில் குருநாதசாமியும், பெருமாள் சாமியும் சென்றது. சப்பரத்தில் காமாட்சி அம்மன் வனகோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேர்களை தோள்களில் சுமந்து சென்று வன கோவிலை சென்றடைந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் குதிரை சந்தைக்கு தமிழகத்தில் ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, நாமக்கல்,கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.
இந்த சந்தையில் மார்வார் இன குதிரைகள், நொக்ரா, சப்ஜா, வெள்ளை சட்டை, செவலை சட்டை, கருப்பு, நாசி, முஸ்கி என பல நிற குதிரைகள் 1500 முதல் 3 ஆயிரம் குதிரைகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
சந்தையில் 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான குதிரை வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், இந்த பண்டிகையை காணவும் சாமி தரிசனம் செய்யவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் தமிழரசு, அவரது மனைவி மோகனாம்பாள் மற்றும் குடும்பத்தாருடன் அந்தியூர் எம்.எல்.ஏ ஏஜி வெங்கடாஜலம் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்தனர்.
பின், மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை உள்ளிட்டவைகளை குடும்பத்துடன் சென்றுபார்வையிட்டனர்.
அவரை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர். அவரிடம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கினர்.