சென்னை:
கேரள நடிகர் சங்கமான ‘AMMA’ அமைப்புக்கான தேர்தல் இன்று கொச்சியில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.
சமீபத்தில் நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இடைக் காலத் தடை வாங்கியிருந்தார்.
இந்நிலையில் கேரள திரையுலகில் சர்ச்சைக்கு மத்தியில அவர் நடிகர் சங்கத் தலைவர் ஆகியுள்ளார். முன்னதாக நடிகர் மோகன்லால் அந்த பதவியில் இருந்தார்.
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது ‘AMMA’ சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுள்ளது.