உக்ரைன், ரஷியா இடையே நேரடி அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதே இந்த போரை முடிவுக்கு கொண்டுவர சிறந்த வழி – டொனால்டு டிரம்ப்!!

வாஷிங்டன்,
உக்ரைன், ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 269வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

பேரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்தார்.

அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

ஆனாலும், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. புதினை சந்தித்தப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேவேளை, டொனால்டு டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) சந்திக்கிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், உக்ரைன் போரை நிறுத்த நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், உக்ரைன், ரஷியா இடையே நேரடி அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதே இந்த போரை முடிவுக்கு கொண்டுவர சிறந்த வழி என்று அனைத்து தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.

தற்காலிக போர் நிறுத்தத்தால் எந்த பயனும் இல்லை. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளது இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *