வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!!

இஸ்லாமாபாத்:
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்​கப்​பட்டு லீக் சுற்று போட்​டிகள் நடை​பெறும். இதில் இரு பிரி​விலும் முதல் 2 இடங்​களைப் பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறும். இந்​தச் சுற்​றில் முதல் 2 இடம் பிடிக்​கும் அணி​கள் செப். 28-ம்​ தேதி நடை​பெறவுள்ள இறு​திச் சுற்​றில் கோப்​பையை வெல்ல பலப்​பரீட்சை நடத்​தும்.

ஏ பிரி​வில் இடம்​பெற்​றுள்ள இந்​திய அணி வரும் செப்​டம்​பர் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்​தான், 19-ம் தேதி ஓமன் அணி​களு​டன் மோத உள்​ளன. இந்​தியா பங்​கேற்​கும் போட்​டிகள் அனைத்​தும் துபா​யில் நடை​பெறவுள்​ளன.

இந்​நிலை​யில் இப்​போட்​டி​யில் பங்​கேற்​கும் பாகிஸ்​தான் அணி விவரம் நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இந்த அணி​யில் அனுபவம் மிகுந்த வீரர்​களான பாபர் அசம், முகமது ரிஸ்​வான் ஆகியோர் இடம்​பெற​வில்​லை.

பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின்​(பிசிபி) இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்​கெட் ரசிகர்​கள், ஆர்​வலர்​கள் ஆகியோரை அதிர்ச்சி கொள்ள செய்​துள்​ளது. ஏனெனில், சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் அதிக ரன்​கள் எடுத்த பாகிஸ்​தான் வீரர்​களில் பாபர் அசமும், முகமது ரிஸ்​வானும் முதல் 10 இடங்​களுக்​குள் இடம்​பெற்​றுள்​ளனர். அதே​போல் ஐசிசி டி20 பேட்​ஸ்​மேன்​களுக்​கான தரவரிசை​யில் பாபர் அசம் 18-வது இடத்​தை​யும், ரிஸ்​வான் 20-வது இடத்​தை​யும் பெற்​றுள்​ளனர்.

பாகிஸ்​தான் அணிக்​காக கடந்த ஆண்டு இறு​தி​யில் இரு​வரும் சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் விளை​யாடி இருந்​தனர். இந்​நிலை​யில் டி20 வடி​வில் நடை​பெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இரு​வருக்​கும் அந்த அணி நிர்​வாகம் வாய்ப்பு வழங்​க​வில்லை என்​பது ரசிகர்​களை அதிருப்தி அடையச் செய்​துள்​ளது.

ஆசிய கோப்பை தொடருக்​கான பாகிஸ்​தான் அணி விவரம்: சல்​மான் அலி அகா (கேப்​டன்), அப்​ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், பஹர் ஸமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்​தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்​கெட் கீப்​பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்​ஸான், சஹீப் ஸாதா ஃபர்​ஹான், சல்​மான் மிர்​ஸா, ஷாஹீன் ஷா அப்​ரிடி, சுஃப்​யான் மொகிம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *