2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு !!

2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது இந்திய அரசு. அதில் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதில் 5 பேருக்கு பத்ம விபூஷணும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 101 பேருக்கு பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரத ரத்னா விருது: மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், பாமுலபார்த்தி வெங்கட நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், கர்பூரி தாக்கூர் மற்றும் லால் கிருஸ்ண அதவானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பத்ம பூஷன் விருது: கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் மற்றும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய தேஜஸ் மதுசூதன் படேல், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கிய சீதாராம் ஜிண்டால் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

பதமஸ்ரீ விருது: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியா, டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணா, அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய ராம் சேத் சவுத்ரி, மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மனோகர் கிருஷ்ணா டோலுக்குக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

அதேபோல் கலைத் துறையில் சிறந்து விளங்கிய நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன் ஈபி, வங்கதேச பாடகி திருமதி ரெஸ்வானா சவுத்ரி பன்யா, பஜனை பாடகர் ஸ்ரீ கலுராம் பாமணியா ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்.

பத்ம விபூஷன்: சமூக பணி துறையில் சிறந்து விளங்கிய பிந்தேஷ்வர் பதக்கிற்கு (மரணத்திற்கு பின்) பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை அவரின் மனைவி அமோலா பதக் பெற்று கொண்டார்.

அதேபோல் நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிஹாரைச் சேர்ந்த சமூக சேவகர் பிந்தேஷ்வர் பதக், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *