சென்னை;
இந்திய தபால் துறையின் கீழ் செயல்படுகிறது. குறிப்பாக, குறைந்த அளவில் முதலீடு செய்து, உறுதியான வருமானம் பெற்று வரிச் சலுகைகளும் பெற விரும்பும் மக்களுக்கு ஏற்ற திட்டம் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்.(National Savings Certificate – NSC)
NSC திட்டத்தின் முக்கியத்துவம், இது அரசு உத்தரவாதத்துடன் வழங்கப்படும் திட்டமாவதாகும். அதாவது உங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு உறுதி அளிக்கப்படுகிறது. இதில் குறைந்தது ரூ.1,000 முதலீட்டுடன் தொடங்கலாம்.
அதிகபட்ச எல்லை இல்லை. முதலீடு செய்யும் பணம் 5 வருடம் லாக்-இன் செய்யப்படும். இந்த காலத்தில் பணத்தை திரும்பப் பெற முடியாது; முன்கூட்டியே எடுத்தால் வட்டி கிடையாது.
NSC திட்டத்திற்கு வருடத்திற்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி ஒவ்வொரு வருடமும் கூட்டுத் தொகையாக சேரும். மேலும், அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதத்தை பரிசீலிக்கிறது. அதனால் இது எதிர்காலத்தில் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்கு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இதனால், வரிவிலக்கு நாடுபவர்களுக்கும் இது மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, ஒருவர் NSC திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதமான 7.7% விலையில் ரூ.11 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், 5 வருடங்களில் அந்த முதலீடு ரூ.15,93,937 ஆகும்.
இதில் ரூ.4,93,937 என்பது வட்டியாக கிடைக்கும் தொகையாகும். அதாவது, ஒரு நிபந்தனை இல்லாத, பாதுகாப்பான முறையில் ரூ.5 லட்சம் வரை லாபம் பெற முடியும்.
NSC திட்டத்தில் சேர விரும்புவோர் அருகிலுள்ள தபால் நிலையத்துக்கு சென்று விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களை (அடையாள அட்டை, முகவரி சான்று, பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்) சமர்ப்பித்து பதிவு செய்யலாம். தற்போது ஆன்லைன் வழியும் சில இடங்களில் ஏற்கப்படுகிறது.