மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி',
மாஸ்டர்’, விக்ரம்' மற்றும்
லியோ’ படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.
தற்போது ரஜினியின் 171 -வது படத்தின் ‘ஸ்கிரிப்ட் ‘ தயார் செய்யும் பணியில் லோகேஷ் ஈடுபட்டு உள்ளார். மேலும் ஜி ஸ்குவாட் (G Squad)’ தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் ‘பைட் கிளப்’ மூலம் தயாரிப்பாளரானார்.
இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று லோகேஷ் கனகராஜ் தனது 2- வது புதிய படம் தயாரிப்பு குறித்து இணைய தளத்தில் அறிவித்துள்ளார். ‘பென்ஸ்’ என்ற புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ‘பென்ஸ்’ படத்தை விரைவில் வெள்ளித் திரையில் பார்க்க வேண்டும் என்பது தனது ‘ஆசை’ என்று லோகேஷ் தெரிவித்து உள்ளார்.
மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என லோகேஷ் தெரிவித்துள்ளார்
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix நிறுவனம் பெற்றுள்ளது. ‘டைட்டில்’, போஸ்டரில் சிவப்பு நிறத்தில்,ஹெல்மெட் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.