அமெரிக்கா;
அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் டல்லாசில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திர நாகமல்லையா (வயது50) என்பவர் கொடூரமாக கொல்லப் பட்டார்.
மனைவி மற்றும் மகன் கண்முன் சக உணவக ஊழியர் யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் என்பவர் அவரை அரிவாளால் தலையை துண்டித்து கொன்றார்.
பின்னர் அந்த தலையை தரையில் பந்து போல உருட்டி சென்று அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். கொலையுண்ட சந்திர நாகமல்லையா கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.
இந்த கொலை சம்பவம் அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ட்ரூத் சமூகவலை தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
டல்லாசில் சந்திர நாகமல்லையா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி அறிந்தேன். கியூபாவை சேர்ந்த சட்ட விரோத குடியேறியால் மனைவி மற்றும் மகன் முன்னிலையில் இந்த மதிப்புமிக்க தலைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
இது காட்டுமிராண்டி தனமானது. நம் நாட்டில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்க கூடாது. இத்தகைய நபரை நாட்டில் அனுமதிக்க கூடாது.
கைதான குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக முன்பு கைது செய்யப்பட்ட கியூபாவை சேர்ந்த இந்த நபர் திறனற்ற ஜோபைடன் ஆட்சியில் நம் தாய் நாட்டில் விடுவிக்கப் பட்டார்.
இது போன்ற சட்ட விரோத குடியேறி குற்றவாளி மீது எனது நிர்வாகம் மென்மையாக இருக்காது.
தேசிய பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம், அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி உள்பட என்னுடைய நிர்வாகத்தில் உள்ள பலர் அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக மாற்றும் பணியில் அற்புதமான வேலை செய்து வருகின்ற னர்.
போலீஸ் காவலில் இருக்கும் இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.
இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.