மதுரை தவெக மாநாட்​டின்​போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்​சம் வாக​னங்​கள் சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​த​வில்லை !!

மதுரை:
மதுரை தவெக மாநாட்​டின்​போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்​சம் வாக​னங்​கள் சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​த​வில்லை என்று உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஏஆர்​.ஜெயருத்​ரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: மதுரை மாவட்​டம் கப்​பலூர் முதல் உத்​தங்​குடி வரையி​லான 31.2 கிலோமீட்​டர் தொலைவு சாலை வழி​யாக, தென் மாவட்​டங்​களில் இருந்து வரும் வாக​னங்​கள் சென்​னை, திருச்சி உள்​ளிட்ட நகரங்​களுக்​குச் செல்​கின்​றன.

இந்த சாலை​யில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை சுங்​கக் கட்​ட​ணம் வசூலாகிறது. எனினும், சாலை பராமரிப்பு மோச​மாகவே உள்​ளது. மேலும், இந்த சாலை​யில் அரசி​யல் கட்​சிகளின் மாநாடு, பேரணி, மத அமைப்​பு​களின் மாநாடு, பொதுக் கூட்​டங்​கள், கலாச்​சார நிகழ்ச்​சிகளுக்கு அனு​மதி வழங்​கப்​படு​கிறது.

இதில் பங்​கேற்க வரு​வோர் வாக​னங்​களை சாலைகளில் நிறுத்​தி​விட்டு செல்​வ​தால், கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது. மேலும், சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​தும் வாக​னங்​கள் பாது​காப்​பாக பயணம் செய்ய முடி​யாத நிலை ஏற்​படு​கிறது.

அண்​மை​யில் தவெக 2-வது மாநில மாநாட்​டுக்கு இந்த சாலை​யில் அனு​மதி வழங்​கப்​பட்​டது. நெல்​லை, தூத்​துக்​குடியி​லிருந்து வந்த 1.30 லட்​சம் வாக​னங்​கள் கப்​பலூர், எலி​யார்​பத்தி உள்ளிட்ட சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் செலுத்​தாமல் சென்​றுள்​ளன. இதனால், மத்​திய மாநில அரசுகளுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இது, சுங்​கக் கட்​ட​ணம் செலுத்தி பயணம் செய்​வோருக்கு பாகு​பாடு பார்ப்​ப​தாகும்.

எனவே, கப்​பலூர் முதல் உத்​தங்​குடி வரையி​லான சாலை​யில் அரசி​யல் கட்​சிகள், மத அமைப்​பு​களின் மாநாடு, பேரணி, பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் திருமண மண்​டபம், வணிக வளாகங்​களுக்கு அனு​மதி வழங்க தடை விதித்​தும், ஏற்​கெனவே வழங்​கிய அனு​ம​தியை திரும்​பப் பெற​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “மனு​தா​ரர் குறிப்​பிட்​டுள்ள சாலை​யில் கடந்த ஓராண்​டில் எத்​தனை வாக​னங்​கள் சென்​றுள்​ளன, எவ்​வளவு சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது என்​பது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்” என்று உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *