நவராத்திரியின் 6-ம் நாள் இன்று..!

நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.


ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.


அதன்படி, நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று, துர்கா தேவியின் காத்யாயனி தேவி வடிவத்தை வழிபடும் நாளாகும்.


காத்யாயனி மந்திரம் துர்கா தேவியின் ஒரு அம்சமான காத்யாயனி தேவியை வணங்க உதவும்.

காத்யாயனி மந்திரங்கள்:

*காத்யாயனி மகாமாயே மகாயோகின்யதீஸ்வரி.

*நந்தகோபசுதம் தேவி பதிம் மே குரு தே நமஹ.

இந்த மந்திரம் திருமண வயதுடைய பெண்கள் விரும்பிய கணவனை அடைய வேண்டி உச்சரிக்கும் மந்திரம் ஆகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *