திருப்பதியில் நாளை கருட சேவை!!

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை பைக்குகள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, அரசு பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாகனங்கள் எந்த வழியாக சென்று வாகன நிறுத்தங்களை அடையாளம் என தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் முடிந்த அளவு அரசு பஸ்களில் திருப்பதி மலைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் இஸ்ரோவுடன் இணைந்து மேக் எ கால் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 300 போலீசார் வரைய வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர உதவி தேவைப்படும் பக்தர்கள் போலீசாரையோ அல்லது தேவஸ்தான அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளலாம்.

முடியாத பட்சத்தில் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *