புதுச்சேரி,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சலைத்துறை மந்திரி நிதின் கட்காரி. இவர் இன்று புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அவர் பல்வேறு அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி, புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கத்தையும், ராஜீவ் காந்தி சதுக்கத்தையும் இணைக்கும் வகையில் 436 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகளையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
ரூ. 1,588 கோடியில் புதுச்சேரி, பூண்டியங்க்குப்பம் இடையே அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையையும் மத்திய மந்திரி கட்காரி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாத், முதல்-மந்திரி ரங்கசாமி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.