சென்னை ,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , ஆதிக்கத்திற்கு அடங்கிப்போக மறுத்து படைத்திரட்டி போரிட்டு – பார்போற்றும் வீரவரலாறு படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
எதிரிகளும் போற்றிய வீரம் – பகைவரை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிச்சல் – சூழ்ச்சிகளை வீழ்த்தும் செயல்திறன் – இதுவே கட்டபொம்மன் வாழ்க்கை சொல்லும் பாடம். வாழ்க அவரது புகழ். என தெரிவித்துள்ளார் .