2,708 உதவி பேராசிரியர் பணியிடங்கள் – இன்று (17.10.2025) முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்!!

சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (அக்.17) முதல் வரும் நவம்பர் 10-ம் தேதி வரை ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 6-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துதல், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.பாட வாரியாக உதவி பேராசிரியர் காலி பணியிட விவரம் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *