முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார்.
இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.

பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பயணம் செய்தனர்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஒரே வேனில் வந்தது குறித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “எனக்குத் தெரியவில்லை, வந்தால் பதில் சொல்றேன்” என்று தெரிவித்தார்.