தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா தொடங்​கியது!!

தஞ்சாவூர்:
தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்​கியது. இதையொட்டி நடை​பெற்ற பரத நாட்​டி​யம் மற்​றும் கலை நிகழ்ச்​சிகளில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

பெரிய கோயிலை கட்​டிய மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்​சாவூரில் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, நேற்று காலை அரண்​மனை வளாகத்​தில் இருந்து புறப்​பட்ட நாட்​டுப்​புறக் கலைஞர்​களின் ஊர்​வலத்தை எம்​.பி. முரசொலி, எம்​எல்ஏ துரை.சந்​திரசேகரன், மேயர் சண்​.​ராம​நாதன், துணை மேயர் அஞ்​சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்​தனர்.

இதில் ஏராள​மான நாட்​டுப்​புறக் கலைஞர்​கள் பங்​கேற்​று, கலை நிகழ்ச்​சிகளை நடத்​தி​யபடி ஊர்​வல​மாக பெரிய கோயில் வரை வந்​தனர்.

தொடர்ந்​து, பெரிய கோயில் வளாகத்​தில் 400 கலைஞர்​கள் பங்​கேற்ற பரத நாட்​டிய புஷ்​பாஞ்​சலி நிகழ்ச்சி நடை​பெற்​றது.

பின்​னர், மேடை நிகழ்ச்சி நடை​பெற்​றது. நிகழ்ச்​சிக்​கு, ஆட்​சி​யர் பா.பிரி​யங்கா பங்​கஜம் தலைமை வகித்​தார். சதய விழாக் குழுத் தலை​வர் து.செல்​வம் வரவேற்​றார். முன்​னாள் எம்​எல்ஏ எம்​.​ராமச்​சந்​திரன் முன்​னிலை வகித்​தார்.

திரு​வாவடு​துறை ஆதீனம் 24-வது குரு​மகா சந்​நி​தானம் அம்​பல​வாண தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள் அருளுரை வழங்​கி​னார்.

விழா​வில், மாவட்ட எஸ்​.பி.ராஜா​ராம், அரண்​மனை தேவஸ்​தான பரம்​பரை அறங்​காவலர் பாபாஜி ராஜா போன்​ஸ்​லே, அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் ஜோதிலட்​சுமி, முன்​னாள் நகர்​மன்​றத் தலை​வர் சி.இறைவன், மண்டல கலை பண்​பாட்டு மைய உதவி இயக்​குநர் ராஜா​ராம் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர், கருத்​தரங்​கம், கவியரங்​கம், 1,040 பேர் பங்​கேற்ற பரத​நாட்​டி​யம், வில்​லுப்​பாட்​டு, வரலாற்று நாடகம் ஆகியவை நடை​பெற்​றன. 2-வது நாளான இன்று (நவ. 1) காலை மங்கல இசை​யுடன் நிகழ்ச்சி தொடங்​கு​கிறது.

தொடர்ந்​து, கோயில் பணி​யாளர்​களுக்கு புத்​தாடை வழங்​கும் நிகழ்ச்​சி, ராஜ​ராஜ சோழன் சிலைக்கு அரசு மற்​றும் பல்​வேறு கட்​சிகள், அமைப்​பு​கள் சார்​பில் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தும் நிகழ்ச்​சி, ராஜவீ​தி​களில் திரு​முறை பண்​ணுடன் 100-க்​கும் மேற்​பட்ட ஓதுவா மூர்த்​தி​களின் வீதி​யுலா நடை​பெற உள்​ளன. தொடர்ந்​து, பெரு​வுடை​யார், பெரிய​நாயகி அம்​மனுக்கு பேரபிஷேகம், பெருந்​தீப வழி​பாடு நடை​பெறும். மாலை​யில் இன்​னிசை நிகழ்ச்​சி, தேவார பண்​ணிசை, சுவாமி வீதி​யுலா, விருது வழங்​கும் விழா உள்​ளிட்ட நிகழ்ச்​சிகள் நடைபெற உள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *