சென்னை,
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தண்னம்பிக்கை, பாராட்டுக்குரியது.உலக கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது.
எதிர்கால பெண் வீராஙனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்ற்க்கு காரணம்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.