ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேர் நரபலி ; கேரளாவில் பரப்பரப்பு!!

கேரளாவில் பணம் தங்கம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை நரபலி கொடுத்தாக திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யட்ட வாலிபர் ஒருவர் பரப்பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அருகேயுள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது நண்பர் நிதிஷ். இருவரும் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டனர். அப்பொழது. இருவரிடமும் விசாரணை மேற்கொண்டத்தில், நரபலிக்காக ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை கொலை செய்து சொந்த வீட்டில் புதைத்த சம்பவத்தை பற்றி கூறி காவல்துறையினரை அதிர வைத்தனர்.

இதனை தொடர்ந்து, இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிகளை வழங்கியது. அதன் அடிப்படையில், இருவரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டதில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விஷ்ணுவும், அவரது நண்பர் நிதிஷ்சும் இணைந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்காக பச்சிளம் குழந்தை ஒன்றை நரபலி முடிவு செய்தனர். இதற்காக விஷ்ணுவின் சகோதரியின் குழந்தை பலிகொடுக்க தீர்மானித்து, இது பற்றி விஷ்ணு, அவரது தந்தை விஜயன், தாய் சுமா மற்றும் சகோதரியிடம் கூறியுள்ளார். இதற்கு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் விஷ்ணுவின் சகோதரிக்கு கல்லூரியில் ஏற்பட்ட தகாத உறவால் பிறந்த குழந்தை என்பதால் இச்செயலை செய்வதற்கு குடும்பந்தினர் அஞ்சவில்லை என்றும் கூறப்படுகின்றது. அதுமட்டும் இன்றி விஷ்ணுவும், அவரது குடும்பத்தினரும் இணைந்து கர்ப்பம் தரித்த சம்பவத்தையோ, குழந்தை பிறந்த சம்பவத்தையோ அக்கம் பக்கதினருக்கு தெரியாமலும், சந்தேகம் வரமாலும் பார்த்துக்கொண்டனர். இதனையடுத்தே பச்சிளம் குழந்தை குடும்பத்தினர் நரபலி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு குடி இருந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு விஷ்ணுவின் குடும்பத்தினர் வேறுபக்கம் குடியேறினர். திடீரென விஷ்ணுவின் தந்தையும் காணாமல் போனார். அக்கம் பக்கத்தினர் விஷ்ணு மற்றும் அவரது தாயாரிடம் இதனை பற்றி விசாரித்தால், அவர்கள் யாரிடமும் முறையாக பதில் வழங்குவதில்லை என்றும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிதிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஷ்ணுவுக்கும், அவரது தந்தை விஜயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்பொழுது நிதிஷும், விஷ்ணுவும் இணைந்து விஜயனை கொலை செய்து, தற்பொழுது தங்கியுள்ள விட்டில் வைத்தே புதைத்தாகவும், பின்பு வீட்டில் மாந்திரீக பூஜைகளையும் செய்ததாகவும் நிதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, விஷ்ணுவின் தந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். ஆனால், சில எலும்புகள் மட்டுமே கிடைக்கப் பெற்றது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட சில உடல்பாகங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்க்கிடையே, குழந்தையின் உடல் புதைக்கப்ட்ட வீட்டின் மாட்டுத்தொழுவத்தின் இடத்திலிருந்து உடலை தோண்டி எடுக்கும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டனர். இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட விஷ்ணு திருட்டு வழக்கில் கைது செய்ய முற்ப்பட்டபோது, தப்பிக்க முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டுதால் மருவத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அவரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் கூடுதலாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் கருதப்படுகின்றது. விஷ்ணுவின் தாய் சுமா மற்றும் அவரது சகோதிரி ஆகிய இரண்டு பேரையும் காவல்த்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்

கேரளாவில் ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *