திருச்சி,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
“கோவையில் நடைபெற்றது போல் பல சம்பவங்கள், வன்புணர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சகித்துக் கொள்ள முடியாதது. இதுபோல் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
எங்கு பார்த்தாலும் போதை, கோவையில் அந்த இடத்தில் 24 மணி நேரமும் முறையற்ற மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு.
கோவை வன்கொடுமை சம்பவம், சட்டங்கள் கடுமையாக இல்லை என்பதை உணர்த்துகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் நடக்காது.
இதே போல் தான் பொள்ளாச்சியில் நடந்தது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.
ஆனால் நடவடிக்கை ஒன்றும் இல்லை. ஆளும் கட்சிகள் எப்போதும் மக்களை பதட்டமாகவே வைத்துக் கொள்வதன் மூலம் தங்கள் மீதான விமர்சனங்களை மடைமாற்றி விடுகின்றன.” இவ்வாறு அவர் பேசினார்.