சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்காக 3 சிறப்பு ரயில்​கள்!!

சென்னை:
சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்காக, காக்​கி​நாடா – கோட்​ட​யம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

இதன்​படி, காக்​கி​நாடா டவுணில் இருந்து நவ.17, டிச.1, 8, 15, 22, 29, ஜன.5, 12, 19 ஆகிய தேதி​களில் வாராந்​திர சிறப்பு ரயில் (07109) இயக்கப்படும்.

மறு​மார்க்​க​மாக, கோட்​ட​யத்​தில் இருந்து நவ.18, டிச.2, 9, 16, 23, 30, ஜன.6, 13, 20 ஆகிய தேதி​களில் வாராந்​திர சிறப்பு ரயில் (07110) இயக்கப்படும்.

இந்த ரயில்​கள் காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர், போத்​தனூர் வழி​யாக இயக்​கப்​படும். மகா​ராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்​தேட்- கொல்​லம் இடையே ஒரு சிறப்பு ரயிலும், தெலுங்​கானா சார்​லபள்ளி – கொல்​லம் இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்​கப்பட உள்​ளன.

சிறப்பு ரயில்​களுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு இன்று (10-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. இத்​தகவல், தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *