இந்து சமய அறநிலை​யத்​துறை கோயில்​கள் சார்​பில், 70 வயது பூர்த்​தி​யடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டம் – தொடங்கி வைத்​த உதயநிதி ஸ்டா​லின் !!

சென்னை:
இந்து சமய அறநிலை​யத்​துறை கோயில்​கள் சார்​பில், 70 வயது பூர்த்​தி​யடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டத்​தின் தொடக்க விழா திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில் நேற்று நடந்​தது.

இதில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்கேற்று திட்​டத்தை தொடங்கி வைத்​து, 200 மூத்த தம்​ப​தி​யினருக்கு சிறப்பு செய்​தார்.

தொடர்ந்து பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சார்​பில் திரு​வல்​லிக்​கேணி நல்​லத்​தம்பி தெரு​வில் ரூ.2.06 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட்​டுள்ள துணை ஆணை​யர், செயல் அலு​வலர் மற்​றும் கண்​காணிப்​பாளர் குடி​யிருப்​பு​களை​யும், பார்த்​த​சா​ரதி தெரு​வில் ரூ.1.35 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட்​டுள்ள பணி​யாளர் குடி​யிருப்​பினை​யும் திறந்து வைத்து வீடு ஒதுக்​கீட்டு ஆணை​களை வழங்​கி​னார்.

அப்​போது, உதயநிதி பேசி​ய​தாவது: சென்னை மண்​டலத்​தில் 200 மூத்த தம்​ப​தி​களுக்​கும், இதர மண்​டலங்​களி​லிருந்து 631 மூத்த தம்​ப​தி​கள் என மொத்​தம் 831 மூத்த தம்​ப​தி​யருக்கு இன்று சிறப்பு செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த தம்​ப​தி​களுக்கு ரூ.2,500 மதிப்​பிலான புத்​தாடைகள், பழங்​கள், மங்​கலப் பொருட்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பொது​வாக, மகனுடைய திரு​மணத்​தை​யும், பேரனுடைய திரு​மணத்​தை​யும் வீட்​டில் இருக்​கக்​கூடிய அப்​பா, அம்​மா​வும், தாத்தா பாட்​டி​யும்​தான் முன்​னிலை வகித்​து, தலை​மையேற்று நடத்தி வைப்​பார்​கள். ஆனால், இந்த பேர​னான எனக்கு தாத்​தா, பாட்​டி​யினுடைய திரு​மணத்தை நடத்தி வைக்​கின்ற வாய்ப்பு கிடைத்​திருக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, சென்னை மேயர் ஆர்​.பிரி​யா, குன்​றக்​குடி ஆதீனம் பொன்​னம்பல அடிகளார், பெரும்​புதூர் ஜீயர்  ராமானுஜ எம்​பார் சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்​மபுர ஆதீனம் சிவ​ஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்​தலிங்க மரு​தாசல அடிகளார், சுற்​றுலாத்​துறை செயலர் மணி​வாசன், அறநிலை​யத்​துறை ஆணை​யர் பி.என்​.தர்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

விஜய் குறித்து மறைமுக விமர்சனம்: ‘தி​முக – 75 அறி​வுத் திரு​விழா’ என்ற பெயரிலான மாநாட்டு நிறைவு விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசுகையில், “திமுகவை அழிக்க வேண்​டும் என பலர் நினைக்​கின்​றனர். புதி​தாக பலர் கிளம்பி வரிசை​யாக வரு​கின்​றனர்.

பாசிச சக்​திகள் நம் கொள்கைமீது கைவைத்​துப் பார்க்க முயற்​சிக்​கின்றன. அதை தடுக்க வேண்​டும். திமுக​வுக்கு கொள்​கை​தான் அடித்​தளம். ஆனால், இன்று சிலர் (தவெக தலை​வர் விஜய்) அடித்​தளமே இல்​லாமல் அரசி​யலுக்கு வர முயற்​சிக்​கின்​றனர்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *