திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் முழு மனதுடன் சுவாமி ஐயப்பனை சரணாகதி அடைந்து, வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும் என்றார்கள் பக்தர்கள்.
குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து பார்ப்போம்.
சிறிய அளவிலான மணி ஒன்றை வாங்கி கொள்ளவேணடும். குலதெய்வதை வணங்கி அந்த மணியை குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு வைத்து வேண்டி எடுத்து வந்து தங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து தம்பதிகள் இருவரும் அய்யப்பனை மனதார பிரார்த்தனை செய்து வேண்டி 18 நாள் விரதம் இருக்க வேண்டும்.
இந்த 18 நாட்களும் தம்பதிகள் இருவரும் பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்க வேண்டும்.
விரத நாட்களில் ஏதோ ஒரு நாள் அவர்களின் சக்திக்கேற்ப சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் அய்யப்ப பக்தர்களை வீட்டிற்கு வரவழைத்து வீட்டில் சமைத்து உணவு அவர்களுக்கு பரிமாறவேண்டும்.
18 விரத நாட்கள் முடிந்த பிறகு அந்த மணியை சபரிமலை செல்லும் பக்தரிடம், இருமுடி கட்டும்போது மணியை கொடுத்து அய்யப்ப மணிமண்டபத்தில் வைத்து வேண்டி அந்த மணியை மீண்டும் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு வேண்டி கொள்ளும் தம்பதிகள் இருவரும், மணி கொண்டு செல்லும் பக்தர் சபரிமலை சென்று வரும் வரை தாங்களும் தங்கள் வீட்டையும் சுத்தமாக வைத்து அய்யப்பனை வணங்கி விரதத்தை தொடரவேண்டும்.
அந்த பக்தர் சபரிமலையில் வைத்து பூஜை செய்து எடுத்து வரும் மணியை, வீட்டில் பூஜையில் வைத்து வழிபடவேண்டும். இவ்வாறு வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பிரார்த்தனையை செய்தபின், அடுத்த வருடம் குழந்தை பாக்கியம் கிடைத்ததும், வீட்டின் பூஜையில் வைத்து வணங்கி வந்த மணியுடன் அதே அளவு இன்னொரு மணி செய்து எடுத்துக்கொண்டு அந்த வீட்டின் ஆண் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை சென்று இரண்டு மணிகளையும் சன்னிதானம் அல்லது அய்யப்ப மணிமண்டபத்தில் கட்டிவிட்டு அய்யப்பனை வணங்கி நன்றி தெரிவித்து வர வேண்டும்.
வசதி உள்ளவர்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றில் மணியை செய்து காணிக்கையாக உண்டியலில் செலுத்தலாம். எல்லா வேண்டுதலுக்கும் இந்த மணி வழிபாடு செய்யலாம்.