கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதியில் பில்லூர் -2 குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை, சீர் செய்யும் பணியினை மாநகராட்சி கமிஷனர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழாய் உடைப்பு சரி செய்யும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சிவா (எ) பழனிசாமி, உதவி பொறியாளர்கள் நாசர், சரண்யா மற்றும் மாநகராட்சிஅலுவலர்கள் உள்ளனர்.