சென்னை,
தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன.
தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த இரு கூட்டணியிலும் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார்.
சேலத்தில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.கே.வாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.