அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘குட் பேட் அக்லி’

பிரபல நடிகர் அஜித் – திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில்அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அப்படத்தின் டைட்டில் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக படக்குழுவுனரிடம் இருந்து வெளியிடப் பட்டுள்ளது.

படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *