சென்னை;
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இப்படத்தை ஏன் மக்கள் வந்து பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு மிக சுவாரசியமான பதிலை கூறியுள்ளார்.
அதில் அவர் ” நீங்க ஒரு படம் எதுக்கு பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்காக வந்து பாருங்கள்.
படத்தின் இயக்குநர், நடிகர்கள், போஸ்டர், பாட்டு , டிரெய்லர் பிடித்து இருந்தால் வந்து படத்தை பாருங்கள். நான் சொன்னேன் என்றெல்லாம் வந்து திரைப்படத்தை பார்க்க வராதீர்கள். நான் படத்தை பார்க்க வற்புறுத்தவில்லை” என கூறியுள்ளார்.