சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகாவையும், லக்ஷயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷி யு ஜென்னையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அதேவேளையில் ஹெச்.எஸ்.பிரனாய் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஃபர்ஹான் ஆல்வியிடமும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 20-22, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷோகோ ஒகாவாவிடமும் தோல்வி அடைந்தனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சு சிங் ஹெங், வூ குவான் சுன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.