சென்னை:
கடந்த 2014-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ‘அஞ்சான்’. இப்படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர்.
யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், ‘அஞ்சான்’ படம் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.
தற்போது ரீ எடிட் செய்து தயாராகி உள்ள ‘அஞ்சான்’ படத்தின் ப்ரிவ்யூ ஷோ நடந்தது. இந்த ப்ரிவ்யூ ஷோவில் சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் கலந்து கொண்டார். அவருடன் இயக்குநர் சரணும் ரீ எடிட் செய்த படத்தை பார்த்துள்ளார்.
இதையடுத்து இயக்குநர் லிங்குசாமியை இருவரும் பாராட்டியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.