டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடை​பெறும்!! இந்​தியா – பாக். பிப்.15-ல் பலப்​பரீட்சை!!

மும்பை:
ஆட​வருக்​கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு இந்​தியா மற்​றும் இலங்கை இணைந்து நடத்​துகிறது.

இந்​தத் தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஐசிசி அறி​வித்​தது.

இதன்​படி டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடை​பெறுகிறது. ஒரு மாதம் நடை​பெறும் இந்த டி 20 கிரிக்​கெட் திரு​விழா​வில் மொத்​தம் 55 ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன.

டி 20 உலகக் கோப்பை தொடரில் 2-வது முறை​யாக 20 அணி​கள் கலந்து கொள்ள உள்​ளன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் 5 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, பாகிஸ்​தான், நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் ஆஸ்​திரேலி​யா, அயர்​லாந்​து, ஓமன், இலங்​கை, ஜிம்​பாப்வே அணி​களும் உள்​ளன.

‘சி’ பிரி​வில் வங்​கதேசம், இங்​கிலாந்​து, இத்​தாலி, நேபாளம், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘டி’ பிரி​வில் ஆப்​கானிஸ்​தான், கனடா, நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்​கா, ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணி​கள் இடம் பிடித்​துள்​ளன. லீக் சுற்​றில் ஒவ்வொரு அணி​யும் தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒருமுறை மோதும்.

லீக் சுற்​றின் முடி​வில் ஒவ்​வொரு பிரி​வில் இருந்​தும் தலா 2 அணிகள் சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறும். லீக் சுற்று பிப்​ர​வரி 7 முதல் 20-ம் தேதி வரை நடை​பெறுகிறது. சூப்​பர் 8 சுற்று 21-ம் தேதி முதல் மார்ச் 1 வரை நடை​பெறுகின்​றன.

இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்​டங்​கள் மார்ச் 4, 5-ம் தேதி​களில் நடத்தப்படுகின்றன. சாம்​பியன் கோப்பை யாருக்கு என்​பதை தீர்மானிக்​கும் இறு​திப் போட்டி மார்ச் 8-ம் தேதி அகம​தா​பாத் அல்லது கொழும்பு நகரில் நடை​பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்​டிகள் இந்​தி​யா​வில் உள்ள டெல்லி அருண் ஜேட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானம், மும்பை​யில் உள்ள வான்​கடே மைதானம் ஆகிய​வற்​றில் நடத்​தப்பட உள்​ளது.

இதே​போன்று இலங்​கை​யில் கண்டி பல்​ல​கலே சர்​வதேச கிரிக்​கெட் மைதானம், கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானம், சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் ஆகிய​வற்​றில் போட்​டிகள் நடை​பெறுகின்​றன.

பாகிஸ்​தான் அணி பங்​கேற்​கும் லீக் ஆட்​டங்​கள் அனைத்​தும் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. அந்த அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறி​னால் அந்த ஆட்​டங்​களும் அங்​கு​தான் நடத்​தப்​படும். மேலும் அரை இறுதி மற்​றும் இறு​திப் போட்​டிக்கு பாகிஸ்​தான் அணி முன்​னேறி​னால் அந்த ஆட்​டங்​களும் கொழும்பு நகரில் நடத்தப்​படும் என ஐசிசி தெரி​வித்​துள்​ளது.

நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் தொடக்க நாளான பிப்​ர​வரி 7-ல் அமெரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் மும்​பை​யில் நடை​பெறுகிறது. தொடர்ந்து 12-ம் தேதி நமீபி​யாவை எதிர்​கொள்​கிறது. இந்த ஆட்​டம் டெல்​லி​யில் நடைபெறுகிறது.

15-ம் தேதி பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்​டம் கொழும்​பில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நடை​பெறுகிறது. கடைசி லீக்​ ஆட்​டத்​தில்​ 18-ம்​ தேதி நெதர்​லாந்​தை சந்​திக்​கிறது.

சேப்பாக்கத்தில் இந்தியா போட்டி இல்லை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 8ம் தேதி நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், 10ம் தேதி நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 13ம் தேதி அமெரிக்கா, நெதர்லாந்து அணிகளும், 15ம் தேதி அமெரிக்கா, நமீபியா அணிகளும், 17ம் தேதி நியூஸிலாந்து, கனடா அணிகளும், 19ம் தேதி ஆப்கானிஸ்தான், கனடா அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.

அதன் பின்னர் சூப்பர்-8 சுற்றில் 26ம் தேதி ஒரு ஆட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளுக்குப் பின்னர் சூப்பர்-8 சுற்றில் பங்கேற்கும் அணி விவரங்கள் தெரியவரும். துரதிருஷ்டவசமாக சேப்பாக்கம் மைதானத்தில், இந்த முறை இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் இடம்பெறவில்லை.

ரோஹித் சர்மாவுக்கு கவுரவம்: ஆடவருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான பிராண்ட் தூதராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவை நியமித்துள்ளார் ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா. கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது.

இந்தத் தொடருடன் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றிருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *