புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் ஐ.ஜியாக இருந்தவர் சந்திரன். இவர் புதுச்சேரி, அந்தமான், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் பணியாற்றிய இவர் இறுதியாக புதுச்சேரியில் ஐ.ஜி.யாகி பணியாற்றி வந்தார்.
இவர் பல்வேறு பரபரப்பான வழக்குகளில் அமைதியான முறையில் தீர்வு கண்டவர். இவரது காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் குற்றச்செயல்கள் ஒடுக்கப்பட்டன. போலீஸாருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு ரவுடிகள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டனர்.
இவரது பணிக்காலம் முடிந்து கடந்த 2023 ம் ஆண்டு மே மாதம் 31 ம் தேதி ஓய்வு பெற்றார்.
தற்போது ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அடுத்தடுத்து அரசியல் ஆர்வம் கொண்டு பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதையடுத்து அரசியல் ஆர்வம் ஏற்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஜி சந்திரனும் தற்போது பாஜகவில் இணந்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதி மற்றும் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் முன்னாள் ஐ.ஜி சந்திரன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.