சென்னை:
நவீன மாடுகள் காப்பகங்களை பராமரிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சி ஆணையரிடம் விருப்பக் கடிதம் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 22,875 மாடுகள், அவற்றின் உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் பொது சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன. சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.
ரூ.10 ஆயிரம் அபராதம்: இப்படி சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு, மாடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021 முதல் 2025 வரை மொத்தம் 16,692 சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.4.43 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டின் உரிமையாளர்கள், மாடு வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைப்படி, சென்னையில் 17 இடங்களில் நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் நவீன மாடுகள் காப்பகங்களில் 710 மாடுகள் அவற்றின் உரிமையாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 13 இடங்களில் சுமார் 1,100 மாடுகளை பரமாரிக்கும் வகையில் காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: இத்திட்டத்தில் பேசின் பாலம் சாலையில் உள்ள 550 மாடுகளை பரமரிக்கும் திறன் கொண்ட காப்பகத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வழங்கி பராமரிப்பதற்கு சேவை மனப்பான்மை உள்ள தன்னார்வலர் குழுவிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த சேவை மற்ற காப்பகங்களுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள், விருப்ப கடிதத்தை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்பிறகு, பாதுகாப்பு சான்றிதழ் விரைவில் கிடைத்து விடும் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கவில்லை.
இதன் காரணமாக, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பாதையில் கடந்த ஆகஸ்டில் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பினர் சோதனை நடத்தினர்.
இக்குழுவினர், ரயில்வே வாரியத்துக்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஒப்புதல் அளித்து, பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தர வேண்டும்.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகே, பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து, இப்பாதையில் சோதனை ஓட்டம் உட்பட பல்வேறு சோதனைகளை நடத்தி ஆய்வு செய்வார்.
ஏதாவது திருத்தம் இருந்தால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவிப்பார். இல்லைஎனில், இப்பாதையில் ரயில் இயக்கலாம் என்று அறிக்கை சமர்ப்பிப்பார்.
இச்செயல்முறைகள் முடிந்து, விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போது, இப்பாதையில் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஓரிரு இடங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இப்பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்க தயாராக இருக்கிறோம். இதற்காக நாங்கள் ரயில்வே வாரியத்துடனும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துடனும் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.