புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!!

கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், வாயுத்தொல்லை ஏற்படும் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் இருக்கின்றன. ஆம்…! சர்க்கரைவள்ளிக்கிழங்கில், வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவும். இதனை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சாப்பிடலாம். அதேசமயம் இயற்கையாகவே கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரஞ்சு, ஊதா, சிவப்பு, வெளிர் மஞ்சள், வெள்ளை நிறம் போன்றகளில் காணப்படுகிறது. இந்த நிற வேறுபாடுகளுக்கு அதிலுள்ள பீட்டா கரோட்டினே காரணமாகும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண், தோல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் எலக்ட்ரானை இழந்த செல்களுக்கு எலக்ட்ரானை அளித்து எப்போதும் இளமையுடன் தோற்றமளிக்க உதவுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *