பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை செய்யும். இதில் முடக்கத்தான் கீரை மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக முடக்கத்தான் கீரை மாத விடாய் கோளாறுகள் முதல் மூட்டு வலி ,வாயு பிரச்சினை ,சளி தொல்லை ,மூலம் ,மல சிக்கல் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்லது .
2.அதனால் இதை அடிக்கடி சமையலில் சேர்த்து வருவோர் வீட்டில் டாக்டர் வரவே மாட்டார்.
3.தினமும் முடக்கத்தான் கீரையினை ஏதாவது ஒரு ரூபத்தில் உட்கொண்டு வந்தால் உங்களை நீங்கள் இளமையுடன் வாழ வழி வகுத்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
4.முடக்கத்தான் கீரையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
5.சிலரை வயிற்றுப்புண் பிரச்சினை வாட்டியெடுக்கும் .இந்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வரலாம்
6.முடக்கத்தான் கீரை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.
7.வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி பிரச்சினை எந்த ஜென்மத்திலும் எட்டி பார்க்காது.