கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு வந்தார் பிரதமர் மோடி.
கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்.
முன்னதாக சேலத்தில் நடைபெற்றுவரும் பாஜக பொதுக்கூட்டத்தில், மேடையில் நின்றிருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களை வரிசையாக சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. ராமதாஸின் கைகளை பிடித்து நலம் விசாரித்தார் பிரதமர், ஓ. பன்னீர் செல்வத்தின் கைகளை பிடித்து சிரித்து நலம் விசாரித்து பேசினார்.
இந்நிலையில் சேலத்தில் பிரதமர் மோடியுடன் பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், ராமதாஸ், பாரிவேந்தர், ஏசி சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.