ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது நா தழுதழுத்தார் பிரதமர் மோடி .
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஜிகே வாசன், சரத்குமார், குஷ்பு, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் சேலம் பொதுக்கூட்டத்தில் பாரத அன்னை வாழ்க…எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே என பிரதமர் மோடி தமிழில் பேச்சை தொடங்கினார் கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன், இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன.
ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது; கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது; ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும்.
மும்பையில் I.N.D.I.A கூட்டணியில் இந்து தர்மத்தின் சக்தியை அழிக்க வேண்டும் என பிரகடனம். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நோக்கம்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், எனக்கும் கிடைக்கும் ஆதரவை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது; இதனால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழ்நாடு வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்றார்.