அறிமுக இயக்குனர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்ட நிலையில்.
இப்பொழுது அப்படத்தின் முதல் பாடலான ‘டமக்கு டமக்கா’ வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இப்பாடலை பாடியுள்ளார்.
அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டமக்கு டமக்கா பாடல் நல்ல ஃபீல் குட் பாடலாக அமைந்துள்ளது.