சில்வர் நிற லெஹங்காவில் ஜொலித்த தமன்னா!!

பிரபல நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா நேற்று மணப்பெண் போல சில்வர் நிற ‘லெஹங்கா’ உடை, வைரம், ரூபி கற்கள் பதித்த நெக்லஸ் அணிந்திருந்தார்.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவரது ஆடை வடிவமைப்பாளர் கௌரவ் குப்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகையான தமன்னா தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ஆடை வடிவமைப்பாளர் தயாரித்த மணப்பெண் போல் மயக்கும் சில்வர் நிற லெஹங்கா உடையை தமன்னா அணிந்தது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏஞ்சல் போல, மணப்பெண் போல தமன்னா மிக அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்.

மேலும் அற்புதம், மனதைக் கவரும், அழகான, வசீகரமான, சிறப்பான ஆடை எனவும் முற்றிலும் அழகாக உள்ளது எனவும் ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். மேலும் காதலனுடன் திருமணம் எப்போது எனவும் இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *