கோவை ;
பிரபல ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மார்ச் 17ஆம் தேதி மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் வினித் சூரி கூறியதாவது;
என்னிடம் சத்குரு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கினேன். அதில் சத்குருவின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் தான் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது என்று தெரியவந்தது. மார்ச் 17 அன்று, அவர் மீண்டும் மீண்டும் வாந்தி மற்றும் மோசமான தலைவலியால் அவதிப்பட்டார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஒரு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரது மூளையில் இரத்தப்போக்குடன் ஒரு பகுதியில் வீக்கமும் இருப்பது தெரிந்தது.
இதனால், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் என்னோடு (டாக்டர் வினித் சூரி), டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சத்குரு வென்டிலேட்டரில் இருந்து வெளி வந்து விட்டார் . தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய உறுப்புகள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.